சனி, 7 ஜூலை, 2018
ஒருவரது ஜாதகத்தில் குரு (வியாழன் ) 6 , 8 , 12 ல் நின்ற பலனை பற்றிய புலிப்பாணி சித்தர் பாடல்.
********
கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன்
கெடுத்தியுள்ள மனைவிபகை நோயால் கண்டம்
ஆளப்பா அரசர்பகை பொருளுஞ்சேதம்
அப்பனே அவமானம் கொள்வண்டம்பன்
யாருக்கு தோஷமுண்டு
தார்வேந்தர் பகையுமுண்டு ரோகமுண்டு
கூறப்பா ஈராறில் எங்கோனாட்சி
குற்றமில்லை சென்மனுக்கு யோகங்கூறே
- புலிப்பாணி சித்தர்.
**********************************************************
விளக்கம் :-
எட்டாம் இடத்தில குருபகவான் வீற்றிருப்பின் அவன் வேசி கள்ளனாகவும் , தீய மனைவியால் பகை கொண்டவனாகவும் , அவளால் பகையாலும் கண்டம் அடைபவனாகவும் , அரசரது பகை பெற்றவனாகவும் , பொருட்செதம் அடைபவனாகவும் , பெரிய டம்பனாகவும் இருப்பான், மேலும் 6 இடத்தில குரு நிற்பின் சாதகனுக்கு அதனாலும் தோஷம் உண்டு , பகை, நோய் ஏற்படும் , ஆயினும் 12 ம் இடத்தில குரு நின்றால் அதுவே அவரது ஆட்சி வீடானால் அதனால் எந்த குற்றமும் சென்மனுக்கு இல்லையென்று ஆய்ந்தறிந்து கூறுவாயாக என்று கூறுகிறார்.
ஞாயிறு, 1 ஜூலை, 2018
ஸ்படிக மாலைகள்
வெள்ளி, 29 ஜூன், 2018
நவரத்தின கல் மோதிரம்
நவரத்தின கல் மோதிரம்
********************
ஒன்பது கல் வைத்த நவரத்தின கல் மோதிரத்தை எல்லோராலும் அணிந்து கொள்ள முடியாது , நவரத்தின கல் மோதிரத்திற்கு வீரியம் அதிகம் அனைவராலும் அதன் சக்தியை தாங்கி கொள்ள முடியாது.
மேஷ ராசி / லக்கினம் , விருட்சிக ராசி / லக்கினம் , லக்கினத்தின் செவ்வாய் உள்ள நபர்கள் அல்லது 9 , 18 , 27 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 9 கல் பதித்த நவரத்தின மோதிரத்தை அணிந்து கொள்ளலாம் , இவர்கள் அனைவரும் செவ்வாய் பகவானின் சாரம் என்பதால் ஒன்பது கற்களின் வீரியத்தை தாங்கி கொள்வார்கள்.
தொடர்புக்கு :-
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
வியாழன், 28 ஜூன், 2018
திங்கள், 25 ஜூன், 2018
நீலக்கல் அணிவது எப்படி?
பொதுவாக ஏழரை சனியின் காலத்திலோ, ஒருவரின் ஜாதகத்தில் சனி திசை நடக்கும் பொழுதோ நீலக்கல் மோதிரம் அணிவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர், இது சரியான முடிவுதானா? என்றால் இல்லை என்பதுதான் பதில்.
சனி பகவான் ஒரு நியதிமான், அவர் நமது பூர்வ ஜென்ம கர்மாக்களை செயல்படுத்தும் நீதிமான். ஏழரை சனி காலங்களில் எந்த செயலும் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் முடிக்க முடியாது, ஏனெனில் சனி பகவான் நமது கர்மாவின் படி எந்த செயலையும் தடங்கல்கள் ஏற்படுத்தி தாமதப்படுத்துவார்.
இந்த சூழலில் ஏழரை சனி நடைபெறும் ஒரு நபர் நீலக் கல் அணிந்தால் , அங்கு சனி பகவான் வலுப்பெற்று மேலும் தடங்கல்களும் தாமதமும் அதிகமாகும்.
இது லக்கினத்தில் சனி பகவான் அமர்ந்த நபர்களுக்கும், 08 , 17 , 26 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும்.
அப்படியெனில் நீலக்கல்லை அணியக்கூடாதா? என்றால் .... அணியலாம் . அங்குதான் இருக்கிறது சூட்சுமம்... சரியான ஜெமோலோஜிஸ்ட் ஒருவரிடமோ, இறையருள் மிகுந்த ஜோதிடர் ஒருவரிடமோ கலந்தாலோசித்தால் இதற்கான சரியான விடை கிடைக்கும்.
நன்றி
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
ஞாயிறு, 24 ஜூன், 2018
நவ ரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி???
முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு
குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு
சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால்
குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில்
ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால்
குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில்
வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால்
வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித
ஒலி வரும்.
அகத்தியரின் பாடல்களில் இருந்து
தொகுக்கப் பட்டுள்ள இந்த
விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும்
நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி
கற்களின் தரம் அறியலாம்.
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








