சனி, 7 ஜூலை, 2018

ஒருவரது ஜாதகத்தில் குரு (வியாழன் ) 6 , 8 , 12 ல் நின்ற பலனை பற்றிய புலிப்பாணி சித்தர் பாடல். ******** கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன் கெடுத்தியுள்ள மனைவிபகை நோயால் கண்டம் ஆளப்பா அரசர்பகை பொருளுஞ்சேதம் அப்பனே அவமானம் கொள்வண்டம்பன் யாருக்கு தோஷமுண்டு தார்வேந்தர் பகையுமுண்டு ரோகமுண்டு கூறப்பா ஈராறில் எங்கோனாட்சி குற்றமில்லை சென்மனுக்கு யோகங்கூறே - புலிப்பாணி சித்தர். ********************************************************** விளக்கம் :- எட்டாம் இடத்தில குருபகவான் வீற்றிருப்பின் அவன் வேசி கள்ளனாகவும் , தீய மனைவியால் பகை கொண்டவனாகவும் , அவளால் பகையாலும் கண்டம் அடைபவனாகவும் , அரசரது பகை பெற்றவனாகவும் , பொருட்செதம் அடைபவனாகவும் , பெரிய டம்பனாகவும் இருப்பான், மேலும் 6 இடத்தில குரு நிற்பின் சாதகனுக்கு அதனாலும் தோஷம் உண்டு , பகை, நோய் ஏற்படும் , ஆயினும் 12 ம் இடத்தில குரு நின்றால் அதுவே அவரது ஆட்சி வீடானால் அதனால் எந்த குற்றமும் சென்மனுக்கு இல்லையென்று ஆய்ந்தறிந்து கூறுவாயாக என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக