வெள்ளி, 29 ஜூன், 2018
நவரத்தின கல் மோதிரம்
நவரத்தின கல் மோதிரம்
********************
ஒன்பது கல் வைத்த நவரத்தின கல் மோதிரத்தை எல்லோராலும் அணிந்து கொள்ள முடியாது , நவரத்தின கல் மோதிரத்திற்கு வீரியம் அதிகம் அனைவராலும் அதன் சக்தியை தாங்கி கொள்ள முடியாது.
மேஷ ராசி / லக்கினம் , விருட்சிக ராசி / லக்கினம் , லக்கினத்தின் செவ்வாய் உள்ள நபர்கள் அல்லது 9 , 18 , 27 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 9 கல் பதித்த நவரத்தின மோதிரத்தை அணிந்து கொள்ளலாம் , இவர்கள் அனைவரும் செவ்வாய் பகவானின் சாரம் என்பதால் ஒன்பது கற்களின் வீரியத்தை தாங்கி கொள்வார்கள்.
தொடர்புக்கு :-
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
வியாழன், 28 ஜூன், 2018
திங்கள், 25 ஜூன், 2018
நீலக்கல் அணிவது எப்படி?
பொதுவாக ஏழரை சனியின் காலத்திலோ, ஒருவரின் ஜாதகத்தில் சனி திசை நடக்கும் பொழுதோ நீலக்கல் மோதிரம் அணிவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர், இது சரியான முடிவுதானா? என்றால் இல்லை என்பதுதான் பதில்.
சனி பகவான் ஒரு நியதிமான், அவர் நமது பூர்வ ஜென்ம கர்மாக்களை செயல்படுத்தும் நீதிமான். ஏழரை சனி காலங்களில் எந்த செயலும் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் முடிக்க முடியாது, ஏனெனில் சனி பகவான் நமது கர்மாவின் படி எந்த செயலையும் தடங்கல்கள் ஏற்படுத்தி தாமதப்படுத்துவார்.
இந்த சூழலில் ஏழரை சனி நடைபெறும் ஒரு நபர் நீலக் கல் அணிந்தால் , அங்கு சனி பகவான் வலுப்பெற்று மேலும் தடங்கல்களும் தாமதமும் அதிகமாகும்.
இது லக்கினத்தில் சனி பகவான் அமர்ந்த நபர்களுக்கும், 08 , 17 , 26 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும்.
அப்படியெனில் நீலக்கல்லை அணியக்கூடாதா? என்றால் .... அணியலாம் . அங்குதான் இருக்கிறது சூட்சுமம்... சரியான ஜெமோலோஜிஸ்ட் ஒருவரிடமோ, இறையருள் மிகுந்த ஜோதிடர் ஒருவரிடமோ கலந்தாலோசித்தால் இதற்கான சரியான விடை கிடைக்கும்.
நன்றி
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
ஞாயிறு, 24 ஜூன், 2018
நவ ரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி???
முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு
குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு
சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால்
குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில்
ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால்
குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில்
வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால்
வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித
ஒலி வரும்.
அகத்தியரின் பாடல்களில் இருந்து
தொகுக்கப் பட்டுள்ள இந்த
விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும்
நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி
கற்களின் தரம் அறியலாம்.
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
சனி, 23 ஜூன், 2018
நவரத்தினங்களின் சிறப்புகள் - பவழம்
************************************
பவழம் கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்தவையாகும்.
இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும்.
இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன.
கடலில் விளையும் இரு ரத்தினங்களில் பவழம் பவழப்பூச்சிகள் எனப்படும்.
சிறிய உயிரினங்களினால் உருவாக்கப்படுகின்றன.
கடினமான பாறைகளின் மேல் இந்த பூச்சிகள் நின்று கொண்டு இரை தேடும் போது இப்பூச்சிகள் உடல்களிலிருந்து உண்டாகக்கூடிய எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன.
இதுவே பவழம் உண்மையாக உற்பத்தியாகும் முறையாகும்.
பவழம் கால்சியம் கார்பனேட்டினால் ஆனது.
மிகச் சிறந்த பவழம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்றும், செம்பருத்தி பூவின் நிறத்தைப் போன்றும், கோவைப் பழத்தைப் போன்றும் செந்திறமாக இருக்கும்.
நாம் பவழம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது.
வெண் பவழம் என்றால் முருகப்பூ போன்ற நிறத்துடன் காணப்படும்.
பவழத்திற்கு ஆங்கிலத்தில் (RED CORAL) கோரல் என்று பெயர்.
பவழத்தின் அமைப்பைக் கொண்டு 6 அல்லது 8 கிரகங்கள் உடையதென இரு வகையாக பிரிக்கப்படுகிறது.
சிவப்பு பவழமானது 8 காரங்கள் பிரிவைச் சார்ந்ததாகும்.
முன்பு நம் நாட்டு கடல் பகுதிகளில் பவழம் நிறைய கிடைக்கப் பெற்றது.
தற்போதோ இத்தாலி மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது.
பவழம் குடுமையான வேதிப் பொருளான அமிலமானது பட்டால் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது.
பவழத்திற்கு 6 குற்றங்கள் உண்டு:
========================
அப்படிப்பட்ட பவளங்கள் அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.
பவழங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ, ஓரங்கள் ஓடிந்தோ, துளைகளுடனோ, இருந்தால் அவை குற்றமுடைய பவழமாக கருதப்படும்.
பவழத்தில் நாள் பட்ட, பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல.
கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் பூமியில் விளைபவையாகும்.
இந்த கற்கள் பவழம் போன்ற அமைப்பை கொண்டது என்பதால் இவற்றை பவழம் என்று எண்ணிவிடக்கூடாது.
செந்நிற கிரகமான செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களான மேஷ, விருச்சிக ராசிக்காரர்களும்,
மிருகசீரிடம்- சித்திரை- அவிட்டம் நட்சத்திர காரர்களும்,
ஜாதகத்தில் செவ்வாய் புத்தி- செவ்வாய் தசை, செவ்வாய் பார்வை நடக்கும் அன்பர்களும்,
பயன் படுத்த காரிய தடை அகன்று தொழில் முனேற்றம் நடக்கும்.
எண் கணிதப்படி 9,18,27 ம் தேதிகளில் பிறந்தவர்களும் பவழத்தை அணியலாம்.
இதைத் தவிர மருத்துவ ரீதியாகவும் பவழத்தை அணிந்தால் இர்த சிகப்பணுக்கள் கூடுகின்றது.
உடலில் சுறுசுறுப்பும் உண்டாகிறது.
செவ்வாய் தோஷமுடையவர்களும், மனத் தளர்ச்சியடைபவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறவும், நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் பவழக்கல்லை அணியலாம்.
பவழத்தை தங்கத்தில் பதித்து மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது.
கண்களில் பாதிப்புடையவர்கள், குடல் புண், இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய், தோல் நோய், பெண்களுக்கு உண்டாகக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் பவழக்கல்லை அணிவதால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம்.
பவழம் தடைகளையும் விபத்தையும் தவிர்க்கும்.
சண்டையையும் வெறுப்பையும் குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
##################################
மனிதனின் உடல் பஞ்சபூத சக்திகளால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே . நம்உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் தான் நம் உடலை இயக்குகிறது.நம் உடலுக்கு தேவையான பஞ்சபூத சக்தி பெற நவரத்தினங்களில் உல்ல கதிர்கள் பெரிதும் நமக்கு துணைபுறிகிறது.
உடலில் உள்ள சக்கரம் இயங்கும் போது தான் ஞானமும் , மேன்மை காண நல்ல சிந்தனை பிறக்கும்.
நம் வாழ்வில் சுபம் தரகூடிய கிரகங்களை கணித்து,சுபங்களை அதிகரிக்க செய்ய தேவையான சிறந்த இராசி கற்கள் தேர்வு செய்து, குற்றம் அற்ற இரத்தினத்தை பரிசோதித்து, சித்தர்களின் வழி முறையில் இரத்தினம் சுத்தி செய்து ,பின்பு அதை உங்கள் உடலில் எந்த கையில், எந்த விரலில் அணிந்தால் உடலில் உள்ள நரம்பு முலம் இரத்தினங்களில் உள்ள கதிர்கள் சரியாக உடலில் போய் சக்கரங்களை இயங்க செய்யும் போது தான் அதீத சக்தியை பெற்று அணைத்து ஆற்றலுடன் இயங்களாம். இதுவே இரத்தினம் அணிந்து வெற்றி பெற்றவர்களின் கறுத்து.
ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இறைவன் நவக்கிரகங்கள் வாயிலாகத்தான் நடத்துகின்றான்.
அந்த நவகிரகங்களின் பிரதிநிதிகள் தாம் இந்த நவரத்தினக் கற்கள்.
ஏதாவது ஒரு கிரகத்தின் தன்மையையோ நவரத்தினத்தின் தன்மையையோ பிரதிபலித்து,தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறது.
மனிதனின் ஜாதக ரீதியான தோஷங்களையும் உடல் ரீதியான குறைபாடுகளையும், நிவர்த்தி செய்து அந்த மனிதனுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பது இரத்தினங்களேயாகும்.
நம் முன்னோர்களான அரசர்களும், ஞானிகளும், சித்தர்களும் இராசிகற்களை பயன்படுத்தி அதீத சக்தியை பெற்று தியானம் மற்றும் அராய்ச்சி ஈடுபட்டு தான் அவர்கள் நினைத்த காரியத்தை சாதித்து உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600





வெள்ளி, 22 ஜூன், 2018
அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று இருக்க வேண்டும், லக்கின ராசிகளுக்கு 3 , 6 , 12 ல் சூரியன் மறையப்பெற்றவர்கள் தினமும் சூரிய உதயத்தின் பொழுது "ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை" பாராயணம் செய்து வர இவர்களுக்கு அரசு வேலை எளிதில் கிடைக்கும்.
இந்த நபர்கள் கையில் சூரியனுக்குரிய நவரத்தினமான மாணிக்கத்தை அணிந்து கொள்வது கூடுதல் பலனை கொடுக்கும்.
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
வெள்ளி, 8 ஜூன், 2018
புதன், 6 ஜூன், 2018
நவரத்தினங்களின் பண்புகள் --புஷ்பராகம் (topaz)
**************************
இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.
கோபம் குறையும்,மனம்அமைதியாக இருக்கும்.நிலம்,வீடு,வாகனம்,வாங்கும் நிலை உருவாகும்.பெரும் புகழ் கிடைக்கும் . பகை,சதி,சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.நல்ல நட்பை கொடுக்கும்.
புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.
யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு,மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு,மீன ராசிக்காரர்களும் புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்.
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
செவ்வாய், 5 ஜூன், 2018
நவரத்தினங்களின் பண்புகள்--பவழம் (coral)
**************************************
இந்தகல் பகுத்தறிவையும்,செயல் அறிவையும் ,துணிச்சலையும் கொடுக்கும் . அதிககோபம் ,பொறாமை,வெறுப்பு,கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும் .பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.
சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும் . முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும்.குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை
உருவாக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது.
ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும்,நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.
யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
நவரத்தினங்களின் பண்புகள் --நீலம் (Blue sappihire)
**************************
ஞானம்,சாந்தம்,பெருந்தன்மை நற்பழக்கம்,ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம்.திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.
தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும்.பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு,சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.
நீலகல்லின் மருத்துவ குணம்
கீல் வாதம்,இடுப்புவாதம்,நரம்புவலி,வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும்,குஷ்ட நோயையும் குணப்படுத்தும்.வயிற்று நோயை சரிபடுத்தும்.அதிக உடல் பருமனை குறைக்கும்.இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.
யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம் கும்பம் ராசிக்காரர்கள், மற்றும் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள், எண் கணித படி 8 17 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண்,பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4 13 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்
மேலும் விபரங்களுக்கு ...
ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ்
765 - மதுரை ரோடு
தேனி ஆனந்தம் அருகில்
தேனி - 625523
தொடர்புக்கு : 9677281600
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















