செவ்வாய், 15 மார்ச், 2011

சேக்கிழார் நாயனார்

பிறந்த இடம் : குன்றத்தூர் (தொண்டை நாடு)
சென்னை போரூர் அருகில் உள்ளது
இயற்பெயர் : அருண் மொழி தேவர்
தந்தை பெயர் : வெள்ளியங்கிரி முதலியார்
தயார் பெயர் : அழகாம்பிகை
தொழில் : இரண்டாம் குலோத்துங்க சோழனின் தலைமை அமைச்சர்
வாழ்ந்த காலம் : கி பி 12 ம் நுற்றாண்டு (கி பி 1133 - 1150 )

சேக்கிழார் பெருமானின் இயற் பெயர் அருண்மொழி தேவர் என்றிருப்பினும் தனது சமூக பெயரான கிழார் என்பதை பொறுத்து சேக்கிழார் என அழைக்கபட்டார். இவர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் தங்கி அங்கு கோயில் கொண்டுள்ள நாகநாதரையும், கிரிகுஜாம்பிகையும் வழிபட்டு வந்தார். திருநாகேஸ்வரதின்பால் கொண்ட பேரன்பினால் தனது சொந்த ஊரான குன்றதூரிலும் திருநாகேச்சரம் என்ற பெயரால் திருக்கோயிலினை எழுப்பி அங்கே இனிதே வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.

அக் காலகட்டத்தில் பாரத நாட்டிலே சனாதான தர்மத்தை தவிர்த்து சமண மதம் செழித்தோங்கி வளர்ந்தது. சமணர்கள் பல்வகை தந்திரங்கள் செய்து அரசர்களை அம்மதத்தின்பால் ஈர்த்தனர். சமணர்களின் சிற்றின்ப சுவை மிகுந்த காவியங்கள் மன்னன் மற்றும் மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. அக்காவியங்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்களை உண்மையென நம்பி மன்னனும், மக்களும் சிற்றின்பத்தில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். பக்தி நெறியில் வந்த தமது முன்னோர்களின் வரலாற்றினை அறியாமலும், போற்றாமலும் களிப்புற்று வந்தனர்.

இதனை கண்ட சமய பெரியோர்கள் மிகவும் வருந்தினர். சேக்கிழார் பெருமான் மிகுந்த வருத்தத்துடன் அரசனை நோக்கி " அரசே நமது முன்னோர்கள் அனைவரும் சைவ சமயத்தில் ஈடுபட்டு, இறைவன் ஈசன்பால் மிகுந்த பக்தி கொண்டு இம்மை, மறுமை, வீடு, என்ற நலன்களையும் வழங்கும் சிவனடியார்களை போற்றி, துதித்து வழிபட்டு வந்தனர். ஆனால் தாமோ பொய்கதையாகிய, சிற்றின்பத்தை தூண்டக்கூடிய சீவக சிந்தாமணி போன்ற கதைகளின்பால் நாட்டம் கொண்டு வருகின்றீர். இதனால் தமக்கோ அல்லது மக்களுக்கோ ஒரு பயனும் விளையாது" என சுட்டி கட்டினார்

செவ்வாய், 1 மார்ச், 2011

சேக்கிழார் பெருமான்

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடி
கடக்களிற்றை கருத்துள் இருத்துவாம்
- சேக்கிழார்

நண்பர்களே பொதுவாக வலைத்தளத்தில் தமிழில் பக்தி சம்பந்தமான பதிவுகள் மிக குறைவாகவே காணபடுகின்றன, ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்த நம் பாரத புண்ணிய பூமியில் பக்தி மார்க்கத்தில் மிதமிஞ்சிய பக்தியை இறைவன்பால் செலுத்திய பக்திமான்கள் எண்ணிலடங்காதவர்கள். அவர்களின் வரலாற்றினை நாம் படிக்கும் பொழுது கல் போன்ற மனமும் கரையும். அந்த பக்திமான்களை சைவம் நாயன்மார்கள் என்று போற்றுகிறது, வைணவம் ஆழ்வார்கள் என்று துதிக்கிறது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் சித்தர்களின் பூமியான தமிழகத்தில் தோன்றி தூய்மையான பக்தியின் மூலம் இறைவன்பால் இரண்டற கலந்தனர். அம்மகான்களின் வரலாற்றினை சொல்வது பெரிய புராணமும், திவ்விய பிரபந்தமும் ஆகும்.
அறுபத்து மூவர் வரலாற்றினை தொகுத்த சேக்கிழார் பெருமானின் கதையிலிருந்து இந்த வலைதளத்தினை எல்லாம்வல்ல குருநாதர் ஸ்ரீ அகஸ்தியம்பெருமானின் திருவருளினால் துவங்குகின்றேன்